November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வவுனியா குளத்தை பாதுகாக்க சத்தியாக்கிரகப் போராடடம்!

சுற்றுலா மையம் என்ற பெயரில் ‘வவுனியா குளம்’ ஆக்கிரமிக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோரி வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வவுனியா குளத்திற்கான மக்கள் செயலணின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

போராட்டத்தில் பொது அமைப்பினர், இளைஞர்கள், சமூகஆர்வலர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

வவுனியாவிலுள்ள குளங்களும் விவசாய நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு தங்களின் கண் முன்னாலேயே அவை இல்லாமல் செய்யப்படுவதாக போராட்டத்தில் ஈடுபடுவோர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தின் குடிநீர்த் தேவைக்கான நிலத்தடி நீர், விவசாய நீர்ப்பாசனம் மற்றும் கால்நடை வளர்ப்பிற்கும் குளங்களே ஆதாரமாக உள்ளதாகவும், இந்நிலையில் சுற்றுலா மையம் என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளால் குளங்கள் வற்றிப் போகும் அபாயம் உருவாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கையுடன் தொடர்புடையவர்கள் நகர சபையுடன் செய்துகொண்ட உடன்படிக்கைகளை மீறிக் கட்டடங்களை அமைத்துள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபடுவோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன்போது, வவுனியாக்குளம் மீதான ஆக்கிரமிப்பு உடனடியாக நிறுத்தப்படவேண்டும் எனவும் இல்லாவிட்டால் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

This slideshow requires JavaScript.