November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக சத்தியலிங்கம் நியமனம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக முன்னாள் வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


கட்சியின் பொதுச் செயலாளராகச் செயற்பட்டு வந்த முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்ததை அடுத்து அப் பதவி வெற்றிடமாகியிருந்தது.


இந்நிலையில், கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்காக, கட்சி மட்டத்தில் பொதுச் செயலாளரொருவரை நியமிக்கும் பொருட்டு துணைத் தலைவர்களாகச் செயற்பட்டு வந்த வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரில் ஒருவரை பொதுச்செயலாளராக நியமிக்க உத்திதேசிக்கப்பட்டிருந்தது.


இதன் பிரகாரம் கட்சியின் பொதுச்சபை கூடும்வரை ப.சத்தியலிங்கத்தை பொதுச் செயலாளராக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் அறிவித்துள்ளார்.