
வடக்கிலுள்ள தீவு பகுதிகளுக்கு புதிய பஸ்களை சேவையில் ஈடுபடுத்த உள்ளதாக பயணிகள் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
தீவகங்களில் தற்போது மிகப்பழைய பஸ்களே போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் வடக்கில் போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதற்காக குழுவை விரைவில் ஸ்தாபித்து, அதற்கு தேவையான வசதிகளையும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொள்வனவு செய்யப்பட்டுள்ள புதிய பஸ்கள் கிடைத்தவுடன் அவற்றை தீவகங்களில் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
வட மாகாணத்தில் பாடசாலை போக்குவரத்து சேவையில் பற்றாக்குறை நிலவுவதாக சுட்டிக்காட்டிய அவர், கஷ்டப் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்கான போக்குவரத்து சேவையை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.