May 26, 2025 2:40:56

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுகாதார ஸ்தாபனத்தின் புகைத்தல் கட்டுப்பாட்டு நிதியுதவியை இழக்கும் ஆபத்தில் இலங்கை

புகைத்தல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு வழங்கும் நிதியுதவிகள் இடைநிறுத்தப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் புகைத்தல் கட்டுப்பாட்டுக்காக உலக சுகாதார ஸ்தாபனம் நிதியுதவிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அமைச்சர் விமல் வீரவன்சவின் தலைமையில் புதிய சிகரெட் வகையொன்று பொது வெளியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

தேசிய புகையிலை கட்டுப்பாட்டு அதிகார சபை, சுகாதார அமைச்சு மற்றும் ஆயர்வேத திணைக்களம் ஆகியன அனுமதி வழங்காத நிலையில், இப்புதிய சிகரெட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புகைத்தல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் இலங்கை ஒரு முன்னுதாரணமாக இருந்ததாகவும், சட்டவிரோத சிகரெட்டால் அனைத்தும் மாற்றமடைந்துள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தேசிய துறைசார் அதிகாரி திருப்பதி சுவீந்திரன் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு மேலும் ஒரு வருடத்துக்கான நிதியுதவியை நீடித்துள்ள நிலையில், இவ்வாறு சட்டவிரோத சிகரெட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் சுகாதார அமைச்சு உட்பட பல்வேறு துறைசார்ந்தோரை உள்ளடக்கிய குழுவினரும் குறித்த சிகரெட் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளனர்.