November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மார்பக புற்றுநோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் ஆண்டுதோறும் அடையாளம் காணப்படும் மார்பக புற்று நோயாளிகளின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதாக, தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் சுமார் 3500 புற்று நோயாளிகள் பதிவாவதாக அந்த திட்டத்தின் பணிப்பாளர் ஜானகி விதானபதிரண தெரிவித்துள்ளார்.

இப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் பெரும்பாலானோர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர்.

நாளாந்தம் மார்பக புற்றநோய்க்கு உள்ளாகும் 10 பேர் வரையிலானோர் அடையாளம் காணப்படுவதாக ஜானகி விதானபதிரண குறிப்பிட்டுள்ளார்.

எனவே ஒக்டோபர் மாதம் உலக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் மார்பக புற்றுநோய் குறித்து விசேடமாக பெண்களுக்கு பல விழிப்புணர்வு திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.