இனம் அல்லது மதத்தை அடிப்படையாகக் கொண்ட பெயர்களுடனான கட்சிகளை பதிவு செய்யாமல் இருப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
நேற்று முன்தினம் தேர்தல்கள் ஆணைக்குழு கூடி இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரட்நாயக்க அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகளை தேசியக் கட்சிகளாக மாத்திரம் பதிவு செய்ய இந்த கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் பெயர் மதம் அல்லது இனத்தை அடிப்படையாக கொண்டிருந்தால், அவற்றின் பெயரை திருத்துவதற்காக கால அவகாசத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.