May 14, 2025 23:41:28

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

நெல்லியடியில் கடந்த 20 ஆம் திகதி நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் , குறித்த திருமண வைபவத்தில் கலந்து கொண்டவர்களிடம் பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் அந்த திருமண நிகழ்வில் கலந்துகொண்டிருந்த யாழ்.மாநகர முதல்வரிடமும் பிசிஆர் பரிசோதனைக்காக மாதிரிகள் பெறப்பட்டன. அவற்றின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளது.

இதேவேளை , கடந்த 20 ஆம் திகதிக்கு பின்னர் தன்னுடன் நேரடியாக தொடர்புபட்டோர் தம்மை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்ளுமாறும் , சுகாதார பரிசோதகர்களுக்கு தங்கள் விபரங்களை வழங்குமாறும்  முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.