file photo: Facebook/ Mangala Samaraweera
தமது சொந்த ஏதேச்சாதிகாரங்களால் நடந்த அட்டூழியங்களை மறைப்பதற்காகவே 11 நாடுகள் ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கு ‘இல்லை’ என வாக்களித்துள்ளதாக முன்னாள் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கை மீதான ஐநா தீர்மானம் குறித்து டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் இணை அனுசரணையில் இலங்கை 2015 ஆம் ஆண்டு அதன் சொந்த நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்மொழிந்த போது, சீனா, ரஷ்யா உட்பட முழு உலகமும் இலங்கையுடன் இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இப்பொழுது இலங்கைக்கு 11 “நண்பர்களே” உள்ளனர் எனவும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மங்கள கூறினார்.
In 2015 Sri Lanka proposed its own reconciliation and accountability mechanism cosponsored by US and Uk; the entire world rallied with us including China and Russia. Now Sri Lanka has only 11 ‘friends’ who voted ‘NO’ merely to hide the atrocities in their own autocracies.
— Mangala Samaraweera (@MangalaLK) March 24, 2021