November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

7 மில்லியன் ´ஸ்புட்னிக் வி’ டோஸ்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ‘ஸ்புட்னிக் வி´ கொரோனா தடுப்பூசியை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அந்த அடிப்படையில் 7 மில்லியன் டோஸ்களை கொள்வனவு செய்வதற்கு 69.65 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்படவுள்ளதாக அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனூடாக இலங்கை மக்கள் தொகையில் 14 மில்லியன் மக்களுக்கு கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.

ஆரம்ப கட்டமாக 5 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு சுகாதார அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.