July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மனித உரிமைகளை மதிப்பதிலேயே இலங்கையின் நீண்ட கால அபிவிருத்தி தங்கியுள்ளது’: அமெரிக்கா

மனித உரிமைகளை மதிப்பதிலேயே இலங்கையின் நீண்ட கால அபிவிருத்தியும் பாதுகாப்பும் தங்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இலங்கை மீதான ஐநா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அமெரிக்க வெளியுறவுத் திணைக்களத்தின் பிரதி பேச்சாளர் ஜெலினா போர்டர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சிறுபான்மை இன மற்றும் மதக் குழுக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையில் மனித உரிமைகளை ஊக்குவிக்கும் நோக்கிலேயே ஐநா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மை இன- மதக் குழுக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக ஆர்வலர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அனைவருக்கும் நீதிக்கான அணுகலை உறுதி செய்வதற்குமே சர்வதேச சமூகத்துடன் ஒன்றிணைந்து, அமெரிக்கா இந்தத் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியதாகவும் ஜெலினா போர்டர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தத் தீர்மானம் ஐநா மனித உரிமைகள் பேரவைக்கான அறிக்கையிடல் தேவையை விரிவுபடுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.