May 29, 2025 21:56:32

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேல் மாகாண பாடசாலைகளில் அனைத்து வகுப்புகளும் மார்ச் 29 முதல் ஆரம்பம்

File Photo: Facebook/unicef sri lanka

கொழும்பு உட்பட மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் அனைத்து வகுப்புகளையும் எதிர்வரும் 29 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மேல் மாகாண பாடசாலைகளில் 5, 11 மற்றும் 13 ஆம் தர வகுப்புகள் கடந்த 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டதுடன், மற்றைய வகுப்புகளை ஏப்ரல் 19 ஆம் திகதி ஆரம்பிக்கவே முதலில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் அனைத்து வகுப்புகளையும் ஆரம்பிக்க முடியுமென சுகாதார தரப்பினர் பரிந்துரைத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி 29 ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பிக்க கல்வி அமைச்சு நடவடிக்கையெடுக்கவுள்ளது.

கொரோனா தொற்றுப் பரவல் அச்சம் காரணமாக கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் பாடசாலைகள் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.