May 13, 2025 7:44:53

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு பஞ்சிகாவத்தை தீ விபத்தில் ஒருவர் பலி!

கொழும்பு, பஞ்சிகாவத்தை பகுதியில் உணவகம் ஒன்றில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடித்ததினாலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெடிப்பு சத்தத்துடன் குறித்த உணவகத்தில் தீ பரவியிருந்த நிலையில், கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் பலப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாகபொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மருதானை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.