July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜெனிவா தீர்மானம்: இலங்கை வெளியுறவு அமைச்சரின் கருத்து என்ன?

இலங்கை மீதான ஐநா தீர்மானத்தில், பிரிட்டன் தலைமையிலான நாடுகள் தோல்வியுற்றுள்ளதாக வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் பேரவையில் 47 உறுப்பு நாடுகள் உள்ள நிலையில், பிரிட்டனுக்கு 22 நாடுகளின் ஆதரவை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தீர்மானத்துடன் தொடர்புடைய நாட்டின் அனுமதி இன்றி ஐநா மனித உரிமைகள் பேரவை, ஒரு நாட்டின் மீது விசேட தீர்மானத்தைக் கொண்டுவர முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தீர்மானத்துக்கு 22 நாடுகள் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், ‘ஏனைய 25 நாடுகளும் தீர்மானத்தைக் கொண்டுவந்த நாடுகளின் பக்கத்தில் இல்லை என்றும் அவர்கள் “ஆம்” எனக் கூறவில்லை’ என்றும் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, இலங்கையின் வெளியுறவு அமைச்சர், ஐநாவில் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்த மற்றும் வாக்களிப்பில் கலந்துகொள்ளாத நாடுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.