May 25, 2025 15:05:01

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை கடற்படையின் புதிய தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் ருவன் பெரேரா நியமனம்

இலங்கை கடற்படையின் புதிய தலைமை பிரதானியாக ரியர் அட்மிரல் ருவன் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

மார்ச் 21ஆம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படைத் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது கடற்படை தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகே தென்னவினால் குறித்த நியமனக் கடிதம் ரியர் அட்மிரல் ருவன் பெரேராவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ரியர் அட்மிரல் ருவன் பெரேரா இதற்கு முன்னர் கடற்படையின் உதவி தலைமை அதிகாரியாக செயற்பட்டிருந்தார்.

முன்னதாக, 36 ஆண்டுகளுக்கும் மேலான தனது கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க ஓய்வு பெற்றதால், இந்தப் புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.