January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாலக களுவெவ இராஜினாமா

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக களுவெவ, அந்தப் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக களுவெவ, அவரது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அவர் இன்னுமோர் அரச பதவிக்கு நியமிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாலக களுவெவ கடந்த 2018 ஆம் ஆண்டு அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.