ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை எதிர்த்து பாகிஸ்தான் வாக்களிக்கவுள்ள போதும், தீர்மான விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.
தீர்மானம் மீதான வாக்கெடுப்பு ஜெனிவா நேரப்படி இன்று முற்பகல் 9 மணிக்கு பின்னர் நடைபெறவுள்ளது.
இதன்போது இலங்கைக்கு அதரவாக பாகிஸ்தான் வாக்களிக்கும் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும் இந்த விடயத்தில் இந்தியா நடுநிலை வகிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியாவின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதும், தமிழக சட்ட சபை தேர்தல் நெருங்கி வருவதால் திமுக உள்ளிட்ட கட்சிகளினால் இந்திய அரசாங்கத்திற்கு கொடுக்கப்படும் நெருக்கடிகள் காரணமாக இந்திய அரசாங்கம் அந்த விடயத்தில் நடுநிலை வகிக்கக் கூடுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியா இலங்கையை ஆதரித்து வாக்களிக்கும் என்று இலங்கை அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டு வருகின்ற போதும், இந்தியாவினால் இதுவரையில் இது தொடர்பாக உத்தியோகபூர்வமாக எந்த அறிவித்தலையும் விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.