ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று நடக்கவுள்ளது.
பிரிட்டன், கனடா, ஜெர்மனி, வடக்கு மசிடொனியா, மொண்டினீக்ரோ மற்றும் மாலவி உள்ளிட்ட நாடுகளின் இலங்கை தொடர்பான தீர்மானத்தின் இறுதி வரைவு இன்று சமர்ப்பிக்கப்படும்.
அதன் மீதான விவாதத்தை தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
வாக்கெடுப்பை நேற்றைய தினத்தில் நடத்த ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்ட போதும், நிகழ்ச்சி நிரலில் கால வரையீடு தொடர்பாக ஏற்பட்டிருந்த சிக்கல் காரணமாக அது இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஜெனிவா நேரப்படி காலை 9 மணிக்கு பின்னர் தீர்மான வரைபு மீதான விவாதம் ஆரம்பமாக உள்ளதுடன், அதனை தொடர்ந்து வாக்கெடுப்பு நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.