
இலங்கையில் குருணாகல் பகுதியில் வாழைப்பழத்தின் விலையால் ஏற்பட்ட தகராற்றில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
குருணாகல் பஸ் தரிப்பிடத்துக்கு அருகே உள்ள உணவகம் ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
உணவகத்துக்கு சென்ற ஒருவர் வாழைப்பழத்தின் விலையை கடை ஊழியரிடம் கேட்டுள்ளார்.
வாழைப்பழம் 30 ரூபாய் என்று ஊழியர் கூற, இருவருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டுள்ளது.
இதன்போது கோபத்தின் உச்சத்திற்கு சென்ற நிலையில், வாடிக்கையாளர் உடைந்த போத்தலினால் கடை ஊழியரை தாக்கியுள்ளார்.
பலத்த காயத்துக்கு உள்ளான கடை ஊழியர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தாக்கிய நபரை குருணாகல் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் நடந்தபோது சந்தேகநபர் மது போதையிலிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.