January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மகாத்மா காந்தியின் ஜனன தினத்தை முன்னிட்டு யாழில் மலரஞ்சலி

மகாத்மா காந்தியின் 151 ஆவது பிறந்ததினம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

யாழிலுள்ள இந்தியதுணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ். போதனா வைத்தியசாலை முன்பாக அமைந்துள்ள காந்தியடிகள் நினைவு தூபியில் காந்தி சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன் போது இந்திய துணைத் தூதுவர் கே.பாலசந்திரன், மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமசந்திரன், சரவணபவன், சிவாஜிலிங்கம், மாவை சேனாதிராஜா, மாகாண சபை அவைத் தலைவர் சிவஞானம், முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன், எதிர்கட்சித் தலைவரின் இணைப்பு செயலாளர் உமாசந்திரா பிரகாஷ், யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சிறிசற்குணராசா உள்ளிட்ட பலரும் மலரஞ்சலி செலுத்தினர்.