
இலங்கையின் சிங்கராஜ இயற்கைக் காட்டின் 5 ஏக்கர் பரப்பில் இரண்டு நீர்த் தேக்கங்கள் அமைக்கப்படவுள்ளதாக நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தெற்கு பகுதியான ஹம்பந்தோட்டைக்கு தூய குடிநீரை விநியோகிக்கும் நோக்கில் இத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த திட்டத்தை முன்மொழிந்த சீன நிறுவனத்திற்கு திட்டத்தை செயற்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
திட்டத்துக்காக சிங்கராஜ காட்டில் அழிக்கப்படும் 5 ஏக்கர் பரப்பளவுக்கு சமமாக வேறு பகுதியில் 100 ஏக்கர் காடு மீள் உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தத் நீர்ப்பாசன திட்டத்தைச் செயற்படுத்த சீன நிறுவனத்திற்கு அரசாங்கம் நிதி வழங்கியுள்ளதாகவும், தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.