July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பயிற்சியை நிறைவு செய்த 10,000 பட்டதாரிகளுக்கு நிரந்தர அரச நியமனம்’

கடந்த அரசாங்க காலத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட 10 ஆயிரம் பயிற்சி பட்டதாரிகளுக்கு  அரச சேவையில் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தினால் 14 ஆயிரம் பட்டதாரிகள் பயிலுனர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தனர்.இவர்களில் 10 ஆயிரம் பேரின் பயிற்சிக்காலம் நிறைவு பெற்றுள்ளதை அடுத்து மாவட்ட செயலக மட்டத்தில் இன்று(திங்கட்கிழமை) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று நிலைமை காரணமாக நிரந்தர சேவைக்கு சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கைகள் தாமதமடைந்திருந்தன.

படித்த இளம் சமூகத்தை நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்யும் தற்போதைய அரசாங்கத்தின் நோக்கத்திற்கு அமைய அரசியல் தலையீடுகள் இன்றி கல்வித் தகைமையாக கருத்தில் கொண்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்படி நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ள பட்டதாரிகளின் பெயர் பட்டியலை https://www.pubad.gov.lk/ என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்..