July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈஸ்டர் தாக்குதல்- ஏப்ரல் 21 க்கு முன் நீதி கிடைக்காவிட்டால் பாரிய போராட்டம்’; பேராயர் அறிவிப்பு

எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆணைக்குழுவினால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தவறினால் நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இலங்கையில், ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று ஏப்ரல் 21 ஆம் திகதியுடன் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில், அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

நீதி கிடைக்கும் வரை மக்களுடன் இணைந்து போராட்டத்தை தொடரவுள்ளதாக தெரிவித்துள்ள பேராயர், குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் எத்தகைய செல்வாக்கு உடையவர்களாக இருந்தாலும் அவர்கள் நீதியின் முன்னால் நிறுத்தப்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

21 ஆம் திகதி நாடு முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் மிகவும் வலுவானதாக இருக்கும்.குறைந்தபட்சம் ஆணைக்குழு வழங்கிய உத்தரவுகளின்படி, வெளிப்படையாகச் செயற்பட்டு யாருக்கும் சிறப்பு சலுகை வழங்காமல் அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கும் வரை நாங்கள் எங்கள் எதிர்ப்பைத் தொடருவோம்.

இதேவேளை, ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டக் கோரி பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் அறிவிப்புக்கு அமைய நாடளாவிய ரீதியில் கடந்த மாதம் ‘கறுப்பு ஞாயிறு’ போராட்டம் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.