இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற இருந்த நிலையில், நிகழ்ச்சி நிரலின் கால வரையீடு சிக்கல் காரணமாக நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இலங்கை எதிராக 46/1 வரைவுத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு ஜெனிவா நேரப்படி நாளை 9.00 மணிக்கு நேரம் குறிக்கப்பட்டுள்ளதோடு, அது இலங்கை நேரப்படி பிற்பகல் 1 மணியாகும்.
ஐநா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வில் இன்றும் நாளையும் இலங்கை உட்பட 9 நாடுகள் மீதான விவாதங்கள் நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.