அடிப்படைவாதத்தை பரப்பிய மாவனெல்லை மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாவனெல்லையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், 2020 டிசம்பர் 5 ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு கடத்தப்படடவர் என பொலிஸ் ஊடகமாவனல்லை மற்றும் காத்தான்குடி பிரதேசத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இருவர் கைது!ப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
44 வயதுடைய குறித்த சந்தேகநபர் தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைத்த தகவல்படி விசாரணை நடத்திய போது, அவர் அடிப்படைவாத நடவடிக்கைக்கு பணம் பெற்றுக்கொண்டவர் எனவும், அவரின் லெப்டொப் கணினியை பரிசோதனை செய்தபோது அவர் அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் என்று தெரியவந்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அடிப்படைவாதத்தை பரப்பிய குற்றச்சாட்டில் மட்டக்களப்பு பொலிஸாரால் காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து 27 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேக நபரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரிக்க, பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் அனுமதி பெற்றுக்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தேக நபர் சாய்ந்தமருது தாக்குதலில் சம்பந்தப்பட்ட ரிஸ்வானுடன் தொடர்புகளை மேற்கொண்டவர் எனவும், இவர் காத்தான்குடி பிரதேசத்தில் அடிப்படைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் எனவும் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.