June 16, 2025 19:50:29

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பரசூட் பயிற்சியின் போது விபத்து – இலங்கை விமானப்படை வீரர் பலி

அம்பாறை – உகண விமானப்படை முகாமில் பரசூட் பயிற்சியில் ஈடுபட்ட இரண்டு பரசூட் வீரர்கள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதன் போது காயமடைந்த மற்றைய விமானப் படை வீரர் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்தில் ரத்மலானை வான்படை முகாமில் சேவையாற்றிய கண்டி – பொல்கொல்ல பகுதியை சேர்ந்த பத்மதிலக என்ற 34 வயது வீரரே உயிரிழந்துள்ளார்.

இன்று (21) காலை குறித்த இரு வீரர்களும் சுமார் 3500 அடி உயரத்தில் இருந்து குதித்த நிலையில் பரசூட்கள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று சிக்குண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விமானப் படை தெரிவித்துள்ளது.