November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சினோபார்ம்’ தடுப்பூசி; அவசரகால பயன்பாட்டுக்கு இலங்கை அனுமதி

Vaccinating Common Image

கொரோனா வைரஸுக்கு எதிராக சீனாவில் தயாரிக்கப்பட்ட ‘சினோபார்ம்’ தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு இலங்கை ஒளடத கட்டுப்பாட்டு அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளது.

‘சினோபார்ம்’ தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிப்பதற்கான செயல்முறையை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

இதேவேளை, தமது கொரோனா தடுப்பு மருந்திற்கு இலங்கை அனுமதி வழங்கும்பட்சத்தில் 300,000 தடுப்பூசிகளை இலங்கைக்கு இலவசமாக வழங்க தயாராக உள்ளதாக சீன தூதரகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த நிலையில், மேலும் 300,000 தடுப்பூசிகளை இலங்கைக்கு இலவசமாக வழங்க சீனா முன்வந்துள்ளதாக சீனாவுக்கான இலங்கை தூதுவர் பாலித கோஹன  தெரிவித்துள்ளார்.

சீனாவின் தயாரிப்பான ‘சினோபார்ம்’ தடுப்பூசி கொரோனாவை ஒழிப்பதில் 86 சதவீதம் செயல்திறன் கொண்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அனுமதி அளிக்கப்படாத நிலையில், சீன மற்றும் ரஷ்ய தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய வேண்டாம் என அரச தாதி உத்தியோகத்தர் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.