இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்று வரும் காடழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கொழும்பு விகாரமகா தேவி பூங்காவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாகையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பதாகை ஜனாதிபதி அலுவலகத்தின் பணிப்பின் பேரில், கொழும்பு மாநகர சபை ஊழியர்களால் அகற்றப்பட்டுள்ளது.
இலங்கை வன வளங்கள் மற்றும் இயற்கைப் பாதுகாப்பு சங்கம் குறித்த 70 அடி நீளமுடைய பதாகையைக் காட்சிப்படுத்தியிருந்தது.
இலங்கையில் காடழிப்பு, யானைகள் கொல்லப்படுவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவே குறித்த பதாகை கொழும்பு மாநகர சபையின் அனுமதியுடன் காட்சிப்படுத்தப்பட்டதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
இதேநேரம், இலங்கை வன வளங்கள் மற்றும் இயற்கைப் பாதுகாப்பு சங்கம் உட்பட பல்வேறு சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் இணைந்து காடழிப்புக்கு எதிராக அமைதி ஆர்ப்பாட்டமொன்றையும் முன்னெடுத்துள்ளனர்.