October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை மீது ‘சர்வதேச ரீதியான பொறுப்புக்கூறல்’ நடைமுறையை அமெரிக்கா உறுதிப்படுத்த வேண்டும்: காங்கிரஸ் உறுப்பினர்

இலங்கை மீது சர்வதேச ரீதியான பொறுப்புக்கூறல் நடைமுறையை உறுதிப்படுத்த அமெரிக்கா முயற்சிக்க வேண்டும் என்று அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டெபோரா ரொஸ் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பாக அவர், அமெரிக்க இராஜாங்க செயலாளர் என்டனி பிலிங்கனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 26 வருட கால யுத்தத்தில் ஏற்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறல் மற்றும் நிறுவன ரீதியான சீர்திருத்தத்தின் அவசியமும் இந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையுடனான இராஜதந்திர உறவுகளின் ஊடாக அமெரிக்கா மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்ட முயற்சிக்க வேண்டும் என்றும் டெபோரா கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கை மீதான 2015 ஐநா தீர்மானத்தைக் கொண்டுவருவதில் அமெரிக்காவின் பிரதான வகிபாகம் காணப்படுகின்றதாகவும் டெபோரா ரொஸ், அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கு நினைவுபடுத்தியுள்ளார்.