வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் தமது அரசாங்கம் ஆர்வத்துடன் செயற்படுகின்றது என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் புதிய தபாலகத்தை திறந்து வைத்து உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் கவலைப்பட்டாலும், 2010 இற்குப் பின்னர் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அத்துடன் தற்போது ‘சுபீட்சத்தை நோக்கி’ என்ற அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் வடக்கில் பிரதேச மட்டங்களிலும், கிராம மட்டங்களிலும் வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது என தெரிவித்துள்ளார்.
இதேவேளை வடக்கில் உள்ள அரசாங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் இங்கு அபிவிருத்தி திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுப்போம் என்று அமைச்சர் கூறியுள்ளார்.