May 29, 2025 23:26:14

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வட்டுக்கோட்டையில் புதிய தபாலகம் அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தபாலகம் இன்று காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

தபால்துறை அபிவிருத்தி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அதனை திறந்து வைத்தார்.

வட்டுக்கோட்டை அத்தியடிப் பிள்ளையார் ஆலயத்துக்கு அருகாமையில் 11.6 மில்லியன் ரூபா செலவில் இந்த தபாலகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண பிரதி தபால்மா அதிபர் மதுமதி வசந்தகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தபால் மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஜெகவீர, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் வடக்கு மாகாண தபால் திணைக்கள உத்தியோகத்தர்கள் பங்கேற்றனர்.