அம்பாறை மாவட்டத்தின் கிராமங்களுக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் நுழைந்ததால் பிரதேச மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.
நேற்று மாலை திடீரென சம்மாந்துறை ஊடாக காரைதீவு ,மாவடிப்பள்ளி, நிந்தவூர் ,பகுதிகளை ஊடறுத்து கிராமங்களுக்குள் யானை கூட்டங்கள் புகுந்துள்ளன.
இதன் போது யானைகளை காட்டுக்குள் விரட்டும் நடவடிக்கையில் வனவிலங்கு அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இதன்போது அங்கு ஏற்பட்டிருந்த அச்ச நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்த வனஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்கவும் உடனடியாக அதிகாரிகளுடன் கலந்துரையாடி யானைகளை காட்டுக்குள் விரட்ட நடவடிக்கையெடுத்திருந்தார்.
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை கல்முனை மற்றும் சவளக்கடை உள்ளிட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக யானை கூட்டங்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இந்த பிரதேசங்களில் இரவு நேரங்களில் யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்துவதுடன் காடுகளை அண்டிய குடியிருப்புகளையும் சேதப்படுத்தி செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.