இலங்கையின் உள்ளக அரசியல் விவகாரங்களில் இந்தியாவின் தலையீட்டை ஐக்கிய மக்கள் சக்தி அனுமதிக்காது என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உள்ளக அரசியலில் தீர்மானிக்கும் சக்தியாக இந்தியாவை அனுமதிக்கும் இந்த அரசாங்கத்தின் எந்தவொரு நடவடிக்கையையும் தாம் எதிர்ப்பதாகவும் மரிக்கார் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஆளும் கட்சியான பாஜக தென்னிந்தியாவில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஈழத்தைப் பெற்றுக்கொடுப்பதாக வாக்களித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் அரசியல் நிலைமைகளில் எந்தவொரு வெளிநாட்டு சக்தியும் ஆதிக்கம் செலுத்துவதை அரசாங்கம் அனுமதிக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.