July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஊடகவியலாளர் கடத்தல் விவகாரம்; ராஜித, சதுர சேனாரத்னவிடம் விசாரணை

சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர், தான் கடத்தப்பட்டதாக முறைப்பாடு செய்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன ஆகியோரிடம் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ள உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தான் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டதாக முறைப்பாடு செய்த சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர், அந்த முறைப்பாடு பொய்யானது என்று விசாரணைகளின் போது தெரிவித்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

முறைப்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் குறித்த தினத்தில் நீர்கொழும்பில் இருந்து தெமட்டகொட புகையிரத நிலையத்திற்கு வந்துள்ளதுடன், அதன் பின்னர் அங்கிருந்து திம்பிரிகஸ்யாயவில் உள்ள சதுர சேனாரத்னவின் அலுவலகத்திற்குச் சென்றுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதன்போது, அங்கு பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன வந்துள்ளதாகவும், பின்னர் ஊடகவியலாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த ஊடகவியலாளரின் கையில் ஏற்பட்டிருந்த சுடு காயம் சீமெந்து கரண்டியால் வைக்கப்பட்டது என்றும் மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் காலத்தில் இவ்வாறான முறைப்பாடு செய்யப்பட்டமை தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

அத்துடன், இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மற்றும் சதுர சேனாரத்ன ஆகியோரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலங்கவிசாரணைளைப் பதிவு செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.