இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று காலை பங்களாதேஷ் பயணமானார்.
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பின் பேரிலேயே பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இந்த விஜயத்தை மேற்கொள்கிறார்.
இன்றும், நாளையும் பங்களாதேஷில் தங்கியிருக்கும் மகிந்த ராஜபக்ஷ, அந்நாட்டின் தேச பிதாவான ஷெய்க் முஜிபுர் ரஹ்மானின் ஜனன தின நூற்றாண்டு விழாவிலும் நாட்டின் சுதந்திர பொன்விழா நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின்போது பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, அந்நாட்டின் ஜனாதிபதி முகமது அப்துல் ஹமீத், வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுடனான கலந்துரையாடல்களிலும் கலந்துகொள்ளவுள்ளார்.
இந்த கலந்துரையாடல்களின் போது விவசாயம், தொழில், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளதாக பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.