கொவிட் – 19 வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் தொழில்களை இழந்தவர்களின் தரவுகளை சேகரிப்பதற்கான வேலைத்திட்டமொன்றை தொழில் அமைச்சு முன்னெடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் நிலவிய காலப்பகுதியில் சுயதொழில்களை மேற்கொள்ள முடியாமல் போனமை, தொழில் தருநர்களால் தொழில்களை இழந்தமை அல்லது கொரோனா அச்சுறுத்தல் காலப்பகுதியில் வேறு சிரமங்கள் காரணமாக சுய தொழில்களை இழந்த தனியார் நிறுவனங்களில் தொழில்புரிந்தவர்கள் தொடர்பான தகவல்களை தொழிலாளர் திணைக்களத்துக்கு வழங்குமாறு தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கமைய தொழில்களை இழந்தோர் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், பணியாற்றிய நிறுவனம், அடிப்படை சம்பளம், பணியில் இருந்து நீக்கப்பட்ட திகதி, பணியாற்றிய காலம், இறுதியாக பெற்ற சம்பளம் உள்ளிட்ட விபரங்களை தொழிலாளர் திணைக்கள பணிப்பாளர் (தொழிற்துறை விவகாரப் பிரிவு) 11 ஆவது மாடி, மெஹெவர பியச, கொழும்பு 05 என்ற முகவரிக்கு அல்லது irlabur456@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு ஏப்ரல் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் அனுப்புமாறு தொழில் திணைக்கள பணிப்பாளர் சட்டத்தரணி பிரபாத் சந்திரகீர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், இது தொடர்பான மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள 0112368502 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.