இலங்கையில் கறுவாப்பட்டையை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத சிகரெட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உள்ளூர் கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்சவினால் கொழும்பில் நட்சத்திர ஹோட்டலொன்றில் நடைபெற்ற நிகழ்வில் இந்த சிகரெட் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நூறு வீதம் கறுவாப்பட்டையை கொண்டே இந்த சிகரெட் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இது நாட்டில் கறுவா உற்பத்திக்கு பெரும் சக்தியாக அமையும் என்றும் அமைச்சர் விமல் வீரவன்ச அதனை அறிமுகப்படுத்தி தெரிவித்துள்ளார்.
‘லயன் ஹார்ட்’ என்ற நாமத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சிகரெட்டை சமந்த புஞ்சிஹேவா என்பவர் தயாரித்துள்ளார்.
இதேவேளை வாயில் சிகரெட்டை வைத்தவாறு அமைச்சர் விமல் வீரவன்ச அதனை அறிமுகப்படுத்தும் புகைப்படம் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
வீரவன்சவின் இந்த செயற்பாடு தொடர்பாக சமூக ஊடகங்களில் பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.