November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அம்பிட்டியே சுமணரத்ன தேரருக்கு பிணை!

மட்டக்களப்பு பண்டாரவெளி பிரதேசத்தில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் ஆஜரான மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரை விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்தன தேரர் உட்பட 3 பேரை பிணையில் செல்ல ஏறாவூர் மேலதிக நீதவான் கருப்பையா ஜீவராணி இன்று அனுமதி வழங்கினார்.

கடந்த 21ஆம் திகதி அம்பிட்டிய சுமணரத்தன தேரர் உட்பட மூவருக்கு எதிராக “தொல் பொருள் திணைக்கள அதிகாரிகளை தாக்கியமை”, “அவர்களை தடுத்துவைத்தமை”, “அதிகாரிகள் கடமையை செய்ய விடாது இடையூறு ஏற்படுத்தியது” போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை ஏறாவூர் மேலதிக நீதவான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

சந்தேகநபர்கள் மூவரையும் தலா இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்கிய நீதவான் விசாரணையை எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.

சந்தேக நபர்களான மட்டக்களப்பு அம்பிட்டியே சுமணரத்ன தேரர் மற்றும் அவரது உதவியாளார் இருவர் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.முகமட் அமீன் மற்றும் சட்டத்தரணி தாவூத் உவைஸ் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.