ரயில்வே ஊழியர்களினால் நேற்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்பட்டு வந்த வேலை நிறுத்தப் போராட்டம் இன்று நண்பகல் 12 மணியுடன் கைவிடப்பட்டதாக ரயில்வே கூட்டுத் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் காமினி லொக்குகேவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
முந்தைய செய்தி
நேற்று நள்ளிரவு முதல் ரயில் சாரதிகளும் கட்டுப்பாட்டாளர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதனால் நாடு பூராகவும் ரயில் சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
ரயில்வே ஊழியர்கள் சிலருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக ரயில்வே கூட்டு தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
முதலில், நேற்று நண்பகல் முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்த நிலையில் அதிகாரிகளின் கோரிக்கைகளையடுத்து சில மணி நேரத்தில் அந்தப் போராட்டம் கைவிடப்பட்டது.
ஆனபோதும், தமது கோரிக்கைகள் தொடர்பாக நேற்று நள்ளிரவுக்குள் அதிகாரிகள் தீர்வுகளை வழங்க தவறியதால் நள்ளிரவு 12 மணி முதல் மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இவர்களின் போரட்டம் காரணமாக வழமையாக இடம்பெறும் ரயில் சேவைகள் பல இன்று காலை இரத்துச் செய்யப்பட்டதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.