January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் ஐநா கவலை!

இலங்கையின் மனித உரிமை நிலவரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் தலைமைச் செயலாளர் அந்தோனியோ குத்தரஸ் கவலை வெளியிட்டுள்ளார்.

ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு அவர் சமர்ப்பித்துள்ள அறிக்கையொன்றில் இது தொடர்பாக குறிப்பிட்டுள்ளார்.

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து வந்தவர்களும், அதில் கலந்துகொண்டு விட்டு இலங்கை திரும்பியவர்களும் கண்காணிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மார்ச்சில் இடம்பெற்ற மனித உரிமை பேரவை அமர்வின் போது தாங்கள் கண்காணிக்கப்பட்டதாக பல அமைப்புகள் முறையிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வகையான அச்சுறுத்தல்கள், பழிவாங்குதல்கள் குறித்து இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் தலைமைச் செயலாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.