
இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக சமிந்த வாஸை மீண்டும் நியமிப்பதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரிகள் சமிந்த வாஸுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுதொடர்பான இறுதித் தீர்மானத்தை நாளை எடுக்கவுள்ளதாகவும், அதன் பின்னரே சமிந்த வாஸின் ஒப்பந்த ஆவணங்கள் தயாரிக்கப்படும் என்றும் இலங்கை கிரிக்கெட் சபை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கை கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமாவதற்கு ஒரு சில மணித்தியாலங்களுக்கு முன்னதாக, சமிந்த வாஸ் பதவி விலகியிருந்தார்.
தனக்கு வழங்கப்பட்ட சம்பளம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக தெரிவித்திருந்தார்.
பதவி விலகுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னரே அவர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.