January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிணைமுறி மோசடி: ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேருக்கு விளக்க மறியல்!

File Photo

மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு, கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தில் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் மறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டில் பிணைமுறி ஏலத்தின் போது, அரசாங்கத்திற்கு 3698 கோடி ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளதாக தெரிவித்து முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேருக்கும் எதிராக சட்டமா அதிபரினால் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இதனை அடிப்படையாக கொண்டு அவர்களை விளக்க மறியலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.