May 29, 2025 12:24:12

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிளிநொச்சியில் விடுதலைப் புலிகள் தங்கியிருந்ததாகச் சந்தேகிக்கப்பட்ட இடங்களில் அகழ்வு நடவடிக்கை

கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் யுத்த காலத்தில் தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்பட்ட இரண்டு இடங்களில் அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் இந்த நடவடிக்கைக்கான அனுமதியை வழங்கிய பின்னர், இன்று பிற்பகல் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட நீதவான் டி. சரவணராஜாவின் கண்காணிப்பின் கீழ் குறித்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இரு அகழ்வு நடவடிக்கைகளிலும் எவ்வித பொருட்களும் கண்டெடுக்கப்படாததைத் தொடர்ந்து, அகழ்வுகளை இடைநிறுத்துமாறு நீதவான் பணித்துள்ளார்.