மத்திய வங்கியில் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 மற்றும் 31 ஆம் திகதிகளில் இடம்பெற்ற பிணைமுறி ஏல மோசடி தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களம் குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
மூவரடங்கிய கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த குற்றப்பத்திரத்தை இன்று தாக்கல் செய்துள்ளது.
சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவின் கோரிக்கைக்கு அமைய மத்திய வங்கி மோசடி குறித்து விசாரணை செய்ய இரு நீதிமன்ற தீர்ப்பாயங்கள் கடந்த மாதம் நியமிக்கப்பட்டன.
அதன்படி, மேல் நீதிமன்ற நீதிபதிகளான டி.தொடவத்த, எம். இஸதீன் மற்றும் மஞ்சுள திலகரட்ன ஆகியோர் அடங்கிய நீதிமன்ற தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது.
இரண்டாவது நீதிமன்ற தீர்ப்பாய நீதிபதிகள் குழாமில் மேல் நீதிமன்ற நீதியரசர் அமல் ரணராஜா, பலல்லே மற்றும் ஆதித்ய படபந்திகே ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
குறித்த வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணநாயக்க, மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், அர்ஜுன் அலோசியஸ் மற்றும் 8 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.