கிளிநொச்ச்சி, தருமபுரம் பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளானோரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சந்தித்து சம்பவம் தொடர்பான விடயங்களை கேட்டறிந்து கொண்டார்.
வட்டக்கச்சியில் அண்மையில் கத்திக்குத்துக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்திருந்தார். அவரின் மனைவி மற்றும் சகோதரர்கள் மீது பொலிஸார் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.
பொலிஸாரின் பக்கச்சார்பான கொடூர அராஜகத்தனமான செயலினை பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தாக்குதலுக்கு உள்ளானோரிடம் கேட்டறிந்து கொண்டார்.
பொலிஸாரால் தற்போது மேற்கொள்ளும் விசாரணைகளில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும் பக்கச்சார்பான முறையில் செயற்படுவதாகவும் கொல்லப்பட்டவரின் மனைவி மற்றும் சகோதரர்களைத்தான் அவர்கள் தாக்குகின்றார்கள் என்று எவ்வாறு நம்புவது என்பது தொடர்பிலும் இதன்போது உறவினர்கள் கேள்வி எழுப்பினர்.