November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரிஷாட் தொடர்பான கருத்து; அமைச்சர் விமலுக்கும் மூன்று ஊடகங்களுக்கும் நீதிமன்றம் தடை

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தொடர்பான உறுதிப்படுத்தப்படாத கருத்துக்களை வெளியிடுவதற்கு அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்தோடு, அமைச்சர் விமல் வீரவன்சவின் உறுதிப்படுத்தப்படாத கருத்துக்களை வெளியிட்ட மூன்று தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் இவ்வாறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தன் மீது தொடர்ந்தும் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வரும் அமைச்சர் விமல் வீரவன்ச மீது விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில், ரிஷாட் பதியுதீன் முறைப்பாடொன்றை மேற்கொண்டிருந்தார்.

குறித்த முறைப்பாட்டு மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, எதிர்வரும் 30 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 9 ஆம் திகதி ‘ஆணைக்குழு அறிக்கையைத் தாண்டிய இஸ்லாமிய அடிப்படைவாதம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாகவே ரிஷாட் பதியுதீன் முறைப்பாடொன்றை மேற்கொண்டிருந்தார்.

அமைச்சர் விமல் வீரவன்சவின் பொய்யான கருத்துக்கள் தமது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்துள்ளதாகவும், 10 கோடி ரூபா மானநஷ்டஈடு பெற்றுத் தருமாறும் ரிஷாட் பதியுதீன் நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.