மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநரும், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டமா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு வழங்கிய அறிவுறுத்தலின் அடிப்படையில் அசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
அண்மையில் அசாத் சாலி தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பிலேயே இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதேநேரம், அசாத் சாலியை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.