May 24, 2025 8:53:44

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் பாடசாலைக் கல்வித் திட்டத்தில் சட்டத்தை ஒரு பாடமாக இணைக்க ஆலோசனை

நாட்டின் சட்டங்கள் தொடர்பில் பொதுமக்களின் அறிவு மிகவும் குறைவான மட்டத்தில் காணப்படுவதாகவும், அதுதொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு அடிப்படைப் புரிதலை வழங்குவது மிகவும் முக்கியமானதாகும் என நீதி அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

முன்னேற்றமடைந்த நாடுகளில் அடிப்படை சட்டம் தொடர்பில் குடியியல் கல்வி வழங்கப்படுவதாகவும், பாடசாலைப் பாடத் திட்டத்தில் சட்ட அறிவை இணைப்பது அவசர தேவையாக உள்ளதாகவும் நீதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் தேசிய கல்வித் திட்டத்தில் இலங்கையின் சட்டத்தையும் ஒரு பாடமாக உள்ளடக்குவதற்குப் பொருத்தமான நெறிமுறையொன்றைத் தயாரிக்க பாராளுமன்ற உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைக் கல்வித் திட்டத்தில் சட்டத்தை ஒரு பாடமாகக் கொண்டுவருவது தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட உப குழு, அதன் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை ஒரு மாத காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.