May 1, 2025 4:54:11

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிங்கள ஊடகத்திற்கு அளித்த செவ்வி தொடர்பில் சுமந்திரன் விளக்கம்

சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்று தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் விளக்கமளித்துள்ளார்.

அந்த செவ்வியில் பஸில் ராஜபக்‌ஷ தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தான் வழங்கிய பதில்களை அடிப்படையாகக் கொண்டு, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பஸில் ராஜபக்‌ஷவிற்கு தான் ஆதரவளிப்பதாக கூறியதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பாக சுமந்திரன் தனது பேஸ்புக் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

43 நிமிடங்களை கொண்ட அந்த செவ்வியில் பஸில் ராஜபக்‌ஷ தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்களை வாசித்து செய்தியின் உண்மைத்தன்மையை மதிப்பிட்டுக் கொள்ளுங்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘SLVLOG’ இணையத்தளத்திற்கு சிங்கள மொழியில் அவர் வழங்கிய செவ்வியில் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்களின் தமிழ் மொழிபெயர்ப்பை சுமந்திரன் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.