கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இணைந்து அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தை அங்கீகரித்தமைக்காக அதானி நிறுவனத்தின் உரிமையாளரான கௌதம் அதானி இலங்கைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இந்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தினூடாக இலங்கை – இந்திய நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் பலப்படுத்த முடியுமாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை அங்கீகரித்தமைக்கு இலங்கை அரசாங்கம், துறைமுக அதிகார சபை மற்றும் ஜோன் கீல்ஸ் நிறுவனத்திற்கும் அவர் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொழும்பு துறைமுக மேற்கு முனைய அபிவிருத்தியில் 51 சத வீத உரிமம் அதானி நிறுவனத்திற்கும், 49 சதவீத உரிமம் துறைமுக அதிகார சபைக்கும் என்ற அடிப்படையில் உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அத்தோடு 35 ஆண்டுகால வேலைத்திட்டமாக இது முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.