13 ஆவது திருத்தம் நாட்டின் அரசியலமைப்பின் ஓர் அங்கம் என்பதனால் அதன்படி நடந்துகொள்வதற்கு அரசாங்கம் கட்டுபட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் ஊடகவிலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகள் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுப்பபதாகவும், இந்த நடவடிக்கைகளின் பின்னால் இந்தியாவின் அழுத்தங்கள் உள்ளனவா என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல, இந்த விடயத்தில் யாருடைய தலையீடும் கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார்.
13 ஆவது திருத்தம் நாட்டின் அரசியலமைப்பில் ஓர் அங்கம் என்பதனால் அதுவொரு அடிப்படை சட்டமாகவே இருக்கின்றது. இதற்கு நாங்கள் கட்டுப்பட வேண்டும்.
அதன்படியே மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று கூறியுள்ளார்.